வெண்பனி மலரே உன் வாசம் உயிரில்
புது சுவாசம் தருதே
உன் இருவிழியால் என் ஆயுள் ரேகை
புது வாழ்வு பெறுதே
காலங்கள் ஓய்ந்த பின்னும் காதல் என்ன
வாலிபம் தேய்ந்தப்பின்னும்
கூச்சம் தான் என்ன
காற்றில் பறக்கும் காத்தாடி நானே
எட்டு வயதாய் கூத்தாடினேனே
காய்ந்த இலை நான் பச்சையானேன்
பாலைவனம் நான் நீர் வீழ்ச்சியானேன்
காற்றில் பறக்கும் காத்தாடி நானே
எட்டு வயதாய் கூத்தாடினேனே
காய்ந்த இலை நான் பச்சையானேன்
பாலைவனம் நான் நீர் வீழ்ச்சியானேன்
தேடிய தருணங்கள் எல்லாம்
தேடியே வருகிறதே
தேகத்தின் சுருக்கங்கள் எல்லாம் சிரிக்கின்றதே
வந்ததும் வாழ்ந்ததும் கண்முன்னே தெரிகிறதே
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே பூக்கிறதே
பாரம் பாய்ந்த நெஞ்சிக்குள்ளே ஈரம் பாயுதே
நரைகளும் மறைந்திடவே