Innum Ethanai Kaalam Varai lyrics

49 O
K
7.7/10
Rating: 7.7/10 from 157 users
Other Innum Ethanai Kaalam Varai Songs

Innum Ethanai Kaalam Varai Song lyrics in Tamil'

இன்னும் எத்தனை காலம் வரை
இப்படியே நாம் இருப்பது
இல்லை நிம்மதி என்றே தான்
கண்ணீர் சிந்தி கிடப்பது

தப்பை சரியாய் எண்ணிக்கொண்டு

நம்மை நாமே இழப்பது

உப்புப் படவே வந்தோம் என்று

கூனி குறுகி நடப்பது

எழுவோம் எழுவோம்

துணிந்தே துணிந்தே

உடலும் உயிரும்

சிவந்தே சிவந்தே

இன்னும் எத்தனை காலம் வரை

இப்படியே நாம் இருப்பது

இல்லை நிம்மதி என்றே தான்

கண்ணீர் சிந்தி கிடப்பது

பொறுத்தார் பூமியை ஆழ்வார் என்ற

பொய்யை நம்ப கூடாது

பொறுமையினாலே வீரம் மறந்த

புழுவாய் போகக் கூடாது

காலம் ஒருநாள் வரும் என்று

காத்துக்கிடப்பது சரியில்லை

காலம் அதனை உருவாக்க

கைகள் போற்ற தவறில்லை

வந்தது வரட்டும் என்றெல்லாம்

வாழ்வதில் இல்லை முன்னேற்றம்

வாழ்வே போன பின்னாலும்

வரலாறாய் ஆவது போராட்டம்

எட்டும் வரைதான் எல்லையென

உணர்ந்தே கடப்போம் தூரத்தை

சொட்டும் குருதியில் இப்பொழுதே

துரத்தி அடிப்போம் சோகத்தை

இன்னும் எத்தனை காலம் வரை

இப்படியே நாம் இருப்பது

இல்லை நிம்மதி என்றே தான்

கண்ணீர் சிந்தி கிடப்பது

நடந்ததை எல்லாம் சரியென்று

சொல்லும் கூட்டம் ஏமாறும்

நடப்பதை எண்ணி கால் வைத்தால்

இல்ல என்றும் சேதாரம்

யாவும் தெய்வச் செயலென்று

எண்ணி கிடப்பது எதனாலே

போதும் இந்த துயரென்று

வேகம் கொள்வோம் புவிமேலே

நட்டது முளைக்கும் என்றே நாம்

நம்பி போனால் முடிவுண்டு

பட்டது எல்லாம் பாடம் போல்

படித்து கொண்டால் நலமுண்டு

கட்டி திறக்கா தாழ்பாளை

தகர்த்தால் தவறா கூறுங்கள்

கட்டுக்கடங்கா கோபத்தை

களமாய் அமைப்போம் வாருங்கள்

இன்னும் எத்தனை காலம் வரை

இப்படியே நாம் இருப்பது

இல்லை நிம்மதி என்றே தான்

கண்ணீர் சிந்திக் கிடப்பது

தப்பை சரியாய் எண்ணிக்கொண்டு

நம்மை நாமே இழப்பது

உப்புப் படவே வந்தோம் என்று

கூனி குறுகி நடப்பது

எழுவோம் எழுவோம்

துணிந்தே துணிந்தே
உடலும் உயிரும்
சிவந்தே சிவந்தே
இன்னும் எத்தனை காலம் வரை
இப்படியே நாம் இருப்பது
இல்லை நிம்மதி என்றே தான்
கண்ணீர் சிந்திக் கிடப்பது

Innum Ethanai Kaalam Varai Tamil & English Song lyrics

Top 10 Songs Of The Week

Click here for Top 50 Tamil Songs