Sindhubaadh
சிந்துபாத்
2 hr 13 mins
7.3/10
Rating: 7.3/10 from 87 users

Sindhubaadh Movie Cast & Crew

Sindhubaadh Film Songs

1
Duration: 03:36 Minutes
2

Duration: 03:36 Minutes
3
Singers: Al Rufian
Duration: 03:18 Minutes
4

Duration: 03:59 Minutes

Sindhubaadh Movie Critic Reviews

சுவாரஸ்யம் குறைவு

2.2/5

கதாநாயகர்களுக்கே உரிய கமர்சியல் கதையில் விஜய் சேதுபதி, சூர்யா விஜய் சேதுபதி, அஞ்சலி என சரியான நடிகர்களை நுழைத்து நல்ல பொழுதுபோக்கு படத்தை கொடுத்து இருக்கிறார் அருண்.

விஜய் சேதுபதி குறும்பு, காதல், காமெடி, பஞ்ச் வசனம், அதிரடி சண்டைக்காட்சிகள் என பக்காவான கமர்சியல் படத்துக்கும் நன்றாக பொருந்துகிறார். அஞ்சலியிடம் காதல் பார்வை, எதிர்பாராத விதமாக தாலி கட்டுதல், சூர்யாவுடனான எமோஷனல், இவனை அடிச்சா தப்பில்லையா? சொல்லுங்க சார் என்று கேட்டு காத்திருந்து பதில் வந்ததும் அடிப்பது என படம் முழுக்க விஜய் சேதுபதி ராஜ்ஜியம் தான்.

விஜய் சேதுபதி எட்டடி பாய்ந்தால் அவர் மகன் சூர்யாவோ எண்பது அடி பாய்கிறார். காமெடி, எமோஷனல், பயம், சண்டை என அவரும் கலக்கி இருக்கிறார். ஜார்ஜிடம் அவர் கதை சொல்ல தொடங்கும்போது ரசிகர்கள் கைதட்ட தொடங்குகின்றனர்.

கற்றது தமிழ், எங்கேயும் எப்போதும், அங்காடித்தெரு வரிசையில் அஞ்சலிக்கு நடிக்க முக்கியத்துவம் கொடுத்து இருக்கிறார்கள். மாமனை அடிக்கும் விஜய் சேதுபதியிடம் பத்தாது இன்னும் அடி என சொல்லும் காட்சி, முத்தக் காட்சி, மலேசியாவில் கடத்தல் கும்பலிடம் சிக்கி சித்தரவதை செய்யும் காட்சி, கல்யாணம் பண்ணி ஒருநாள் கூட வாழலைன்னா என்று கெஞ்சும் காட்சி என தன் திறமையை காட்டி இருக்கிறார். விஜய் சேதுபதி அஞ்சலி ஜோடி பொருத்தமாக இருக்கிறது.

மிரட்டும் வில்லனாக லிங்கா. ஈவு இரக்கமே இல்லாமல் கொல்லும் காட்சிகளில் பதற வைக்கிறார். ஆனால் விஜய் சேதுபதி முன்பு மட்டும் அடங்கி போவது செயற்கையாக இருக்கிறது. இவரது கெட்-அப் மிரள வைக்கிறது.

படத்தின் பெரிய பலம் விஜய் கார்த்திக் கண்ணனின் ஒளிப்பதிவு. தென்காசியாக இருந்தாலும் சரி, மலேசியாவாக இருந்தாலும் சரி விஜய்யின் கேமரா அழகாக படம் பிடித்துள்ளது. கோணங்களாலும் வண்ணங்களாலும் நம்மை அசர வைத்துள்ளார். யுவனின் இசையில் படம் கமர்சியலாக மாறி இருக்கிறது. ரூபன் படத்தொகுப்பில் இன்னும் நீளத்தை குறைத்து இருக்கலாம்.

முதல் பாதியில் காதல், காமெடி, ஆக்ஷன் என்று நகரும் கதை அஞ்சலி சிக்கியதும் வேகம் குறைந்து போகிறது. கமர்சியல் படத்திலும் தோல் வியாபாரம் என்ற இதுவரை யாரும் தொடாத ஒரு விஷயத்தை கையில் எடுத்து இருக்கிறார்கள். சில தேவையில்லாத காட்சிகளால் படத்தின் நீளம் மட்டும் சற்று அதிகமாக தெரிகிறது. மற்றபடி குடும்பத்துடன் பார்க்கக்கூடிய பொழுதுபோக்கு படமாகவும் நல்ல கருத்தை சொல்லும் படமாகவும் அமைந்து இருக்கிறது.

ஊரில் சிறுவன் சூர்யாவுடன் சேர்ந்து சின்ன சின்ன திருட்டுகளை செய்து வருகிறார் விஜய் சேதுபதி. சொந்த வீட்டில் இருக்கும் இவரை திருட்டு தொழிலை விட்டுவிட்டு நன்றாக வாழ அவரது நண்பர் ஜார்ஜ் அறிவுரை கூறுகிறார். ஆனாலும் அதை ஏற்க மறுத்து திருட்டு தொழிலையே செய்து வருகிறார். விஜய் சேதுபதிக்கு சரியாக காது கேட்காது.

தனது மாமா அருள்தாஸின் வற்புறுத்தலின் பேரில் மலேசியாவில் வேலை பார்த்து அஞ்சலி விடுமுறைக்கு ஊருக்கு வருகிறார். மிகவும் சத்தமாக பேசக்கூடிய இவரை பார்த்தவுடன் காதல் வயப்படுகிறார் விஜய் சேதுபதி.

விஜய் சேதுபதியின் காதலை மறுக்கும் அஞ்சலி பின்னர், அவரது காதலை ஏற்றுக் கொள்கிறார். இந்த காதலை பிடிக்காத மாமா அருள்தாஸ், அஞ்சலியை கண்டிக்கிறார். இதனால் கோபமடையும் விஜய்சேதுபதி அருள்தாஸை வெளுத்து வாங்குகிறார்.

இந்த கோபத்தின் வெளிப்பாடாக மீண்டும் மலேசியா செல்லும் அஞ்சலியை அங்கிருக்கும் லிங்கா கும்பலிடம் பணத்திற்கு விற்று விடுகிறார். இதையறியும் விஜய்சேதுபதி மலேசியாவிற்கு சென்று அஞ்சலியை மீட்க நினைக்கிறார்.

இறுதியில் லிங்கா கும்பலிடம் சிக்கி இருக்கும் அஞ்சலியை விஜய்சேதுபதி மீட்டாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

Published by Others on: 28-06-2019. Originally published here

ஒட்டாத லாஜிக்

2.0/5

ஒரு ஆக்ஷன் மசாலா என முதலிலேயே பிளான் செய்துவிட்டு தான் படமெடுத்திருக்கிறார்கள்.ஆனால் அதற்கான பரபர திரைக்கதை இல்லை. விஜய் சேதுபதி என மிகப்பெரும் பலம் கதையில் இருக்கிறது. ஏழு மலை ஏழு கடல் தாண்டி கதை தான். ஆனால் படத்தின் ஆரம்பத்திலிருந்தே எங்கோ ஏதோ சரியில்லை என்ற உணர்வு வந்துவிடுகிறது. பின்னனிக்கு, அதன் விவரங்களுக்கு என படு பயங்கரமாக உழைத்திருக்கிறார்கள்.

ஆனால் அத்தனையும் விழழுக்கு இறைத்த நீராக மாறிவிட்டது. ஒரு ஆகஷன் மசலா படமே ஃபேண்டஸி கதை தான். அதிலும் இந்தக்கதையின் அடிநாதமே சிந்துபாத் கதைதான் அதில் லாஜிக் என்பது தேவையில்லை ஆனால் நாம் படம் பார்த்துக் கொண்டிருக்கும்போது நமக்குள் மேஜிக் நிகழ்ந்து நாம் அப்போது எந்தக் கேள்வியும் கேட்கக்கூடாது. ஆனால் இந்தப்படத்தில் படம் முழுதுமாக ஒவ்வொரு காட்சியிலும் இது இப்படி எப்படி நடக்கும் என்கிற கேள்வி தொற்றிக்கொள்கிறது. அதனாலேயே படம் நம்மிடமிருந்து அன்னியப்பட்டு போகிறது.

விஜய் சேதுபதி அவரது வேலையை நன்றாகவே செய்திருக்கிறார். சில இடங்கள் மாஸாக இருக்கிறது. ஆனால் பல இடங்களில் அது சரியாக ஒட்டவில்லை. அவரால் அது எப்படி முடியும் என்ற கேள்விக்கு படத்தில் பதிலில்லை. இதில் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா எதற்கு என்பதே தெரியவில்லை. படத்தில் அவர் என்னதான் செய்கிறார். அவர் கேரக்டரை அப்படியே தூக்கிவிட்டு எடுத்தாலும் படம் அப்படியே இருக்கிறது. அஞ்சலி வரவர அழகாகிக்கொண்டே போகிறார். அவரது நடிப்பு தான் இந்தபடத்தின் ஒரே ரிலிஃப். வில்லனாக வருபவர், விவேக் பிரசன்னா ஆகியோரின் கடும் உழைப்பு மொத்தமாய் வீணடிக்கப்பட்டிருக்கிறது.

அருண்குமார் இயக்கத்தில் முன் வந்த இரண்டு படங்களும் கமர்ஷியல் படங்களே ஆனால் அதில் படம் முழுதும் ஒரு உயிர் இருக்கும் ஒவ்வொரு காட்சியிலும் ஒரு எமோஷன் நம்மை இழுத்து செல்லும் இந்தப்படத்தில் அது வலிந்து எழுதப்பட்டதாய் தெரிகிறது. உணர்வுகளில் உண்மையில்லை. பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்.

இசை யுவன் சங்கர் ராஜா பாடல்கள் அனைத்தும் தாலாட்டு. நெடுநாட்கள் கழித்து கேட்டாலும் மனதில் மயிலிறகை வருடும். எடிட்டிங் ரூபன் மாண்டேஜாக வரவேண்டிய காட்சிகள் விரிவாய் வருகிறது. விரிவாய் வர வேண்டியது மாண்டேஜில் வருகிறது. கேமரா சண்டைக்காட்சிகளை அற்புதமாக படமாக்கியிருக்கிறது. அந்த ஒளி அமைப்பு பிரமாதம் ஆனால் அது மனதில் ஒட்டவில்லை என்பது தான் மைனஸ்.

Published by Others on: 28-06-2019. Originally published here

Sindhubaadh Tamil Movie Videos

Sindhubaadh Posters & Stills

action-block_w150_h150_cw150_ch150_thumb.jpg
vijay-sethupathi-in-sindhubaadh_w150_h150_cw150_ch150_thumb.jpg
may-16th-release_w150_h150_cw150_ch150_thumb.jpg

Other Popular Vijay Sethupathi Movies

Movie Naanum Rowdy Thaan
Movie Kathai Thiraikathai Vasanam Iyakkam
Movie Oru Nalla Naal Paathu Soldren
Movie Seethakaathi
Movie Super Deluxe
Movie Pizza

Recently Popular Movies

Movie Thumbaa
Movie Mosadi
Movie Game Over
Movie Suttu Pidikka Utharavu
Movie Nenjamundu Nermaiyundu Odu Raja
Movie Kolaigaran

You may also be interested in

Share Your Comments About Sindhubaadh

Disclaimer

  • We do not sell pirated Sindhubaadh DVDs & VCDs. We recommend you to buy movies of original DVD & VCD.
  • We do not provide paid / free Sindhubaadh Movie downloads.
  • We do not offer to watch Sindhubaadh movie online.
  • Sindhubaadh Movie Review are added by registered customers.
  • Free wallpapers download of Sindhubaadh movie, hero, heroine, etc is available in our Gallery section.
  • Sindhubaadh Wiki & Box office collections are updated regularly.

Related Tags

Sindhubaadh, Sindhubaadh Movie Review, Sindhubaadh Full Story, Movie, Film, Cinema, Padam, Kollywood, Tamil

Sindhubaadh

Sindhubaadh is a action genre Tamil Movie, written & directed by S.U.Arun Kumar & composed by Yuvan Shankar Raja. Starring Vijay Sethupathi, Anjali, and Vivek Prasanna Sindhubaadh Release Date is 27-06-2019