Sanga Thalaivan (2021) Movie Details

Sanga Thalaivan
Tamil
Mani Maran
(India)
2 hr 6 mins

Sanga Thalaivan Movie Cast

Sanga Thalaivan Crew List

Sanga Thalaivan International Release Dates

Country
Release Date
India
26-02-2021

Sanga Thalaivan Film Songs

1
Singers: Jayamoorthy
Duration: 04:06 Minutes
2
Singers: Saindhavi
Duration: 03:58 Minutes

Sanga Thalaivan Movie Critic Reviews

சங்கத்தலைவன் விமர்சனம்

2.5/5

சங்கத்தலைவன் என்கிற தலைப்பை பார்த்தும், அதுவும் சமுத்திரக்கனி நடிக்கிறார் என்றால் படத்தில் இருந்து என்ன எதிர்பார்க்கலாம் என்பது நமக்கே தெரியும். கிராமத்து பின்னணியில் எடுக்கப்பட்டுள்ள படத்தில் சமுத்திரக்கனி இஷ்டம் போன்று சொற்பொழிவு ஆற்றுகிறார். ஊழியர்களின் நலனுக்காக பாடுபடும் ஒரு சங்கத்தின் தலைவர் தான் சிவலிங்கம்(சமுத்திரக்கனி). ஃபேக்டரியில் வேலை செய்தபோது ஏற்பட்ட விபத்தில் சிக்கிய ரங்கனுக்கு ( கருணாஸ்) சிவலிங்கம் உதவி செய்வதுடன் கதை துவங்குகிறது. பாதிக்கப்பட்ட நபருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்கிறபோது ஃபேக்டரி உரிமையாளர்(மாரிமுத்து) சிவலிங்கம் மற்றும் ரங்கனை பழிவாங்கும்போது கதை சூடுபிடிக்கிறது. படத்தில் ரசிகர்களுக்கு ஏற்கனவே தெரிந்த கம்யூனிச சித்தாந்தங்களை சொல்லியிருக்கிறார்கள், அதில் சில இடங்களில் நன்றாகவும் இருக்கிறது. நீதிக்காக போராடும் போது ஒருவர் சந்திக்கும் பிரச்சனைகளை சுவாரஸ்யமாக காட்டியுள்ளனர். சில கதாபாத்திரங்கள் உருவாக்கப்பட்ட விதம் அருமை. தன் நடிப்பால் கருணாஸ் தனித்து தெரிகிறார். ஈவு இரக்கமே இல்லாத ஃபேக்டரி உரிமையாளராக நடிப்பது தனக்கு பெரிய விஷயமே இல்லை என்பது போன்று சிறப்பாக நடித்திருக்கிறார் மாரிமுத்து. பல போராட்டங்களை சந்திக்கும் அப்பாவி பெண்ணாக சுனுலக்ஷ்மி நன்றாக பொருந்துகிறார். ரம்யா சுப்ரமணியன் மற்றும் விக்ரம் ஆனந்த் தங்கள் கதாபாத்திரங்களை உணர்ந்து நடித்திருக்கிறார்கள். படத்தில் புதிதாக எதுவும் இல்லை. ஒரு கட்டத்திற்கு பிறகு ஒரே அட்வைஸ் தான். அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதை எளிதில் கணிக்க முடிகிறது. இரண்டாம் பாதியில் படம் மேலும் மோசமடைகிறது. சித்தாந்தங்களை சொல்வதில் காட்டிய அக்கறையை திரைக்கதையில் காட்டவில்லை. சங்கத்தலைவன்- ஆத்து ஆத்துனு ஆத்துறார்.

Published by Others on: 26-02-2021. Originally published here

Other Popular Samuthirakani Movies

Recently Popular Movies

Sanga Thalaivan

Sanga Thalaivan is a 2021 Tamil Film stars Mani Maran , Samuthirakani , Karunas , Ramya Subramanian , Jayamoorthy , Saindhavi , Teejay , Barath Veeraraghavan , Arunraj Kamaraj , Robert Sargunam , directed by Mani Maran & music by . Sanga Thalaivan Release Date is 26-02-2021 and Sanga Thalaivan running time is 126 Min