Original Music Composer : | Vishal Chandrasekar |
Director : | Rajkumar Periasamy |
கவுதம் கார்த்திக்கு ஏற்ற கதாபாத்திரம் என்பதால் நடிப்பில் தனது திறமையை நிரூபித்து காட்டியிருக்கிறார். அதேபோல், லோக்கல் பாஷை, அழுக்கு படிந்த முகம் என குப்பத்து இளைஞனாக மனதில் பதிகிறார். கவுதமின் நண்பர்களாக நடித்திருப்பவர்களும் அவருக்கு இணையாக போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள்.
நாயகி சானா மக்பலுக்கு அறிமுக படமாக இருந்தாலும், தனக்கேற்ற கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துவிட்டு சென்றிருக்கிறார். ரொமான்ஸ் காட்சிகளில் கூடுதல் அழகாக தெரிகிறார்.
இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, தங்க கடத்தல் பின்னணியில் வாழ்க்கையை தொலைத்துவிட்ட இளைஞர்களின் வாழ்வியலை படமாக கொடுத்திருக்கிறார். படத்திற்காக இவர் தேர்வு செய்த லொக்கேஷன்கள் எல்லாம் ரொம்பவும் அழகாக இருக்கிறது.படத்தில் அனைவரையும் அழகாக வேலை வாங்கியிருக்கிறார். அதை ஒவ்வொரு காட்சியையும் பார்க்கும்போதே தெரிகிறது.
suriya, palani on 09-07-2015
Rangoon is a 2017 Tamil Film stars Vishal Chandrasekar , Rajkumar Periasamy , Gautham Karthik , Sana Makbul , Daniel Annie Pope , Siddique , Supergood Subramani , directed by Rajkumar Periasamy & music by Vishal Chandrasekar. Rangoon Release Date is 09-06-2017 and Rangoon running time is 122 Min