Original Music Composer : | R.H.Vikram |
Director : | Feroz |
கயல் ஆனந்தி மற்ற படங்களைப் போல இந்த படத்திலும் தனது நடிப்பின் மூலம் வரவேற்பை பெற்றிருக்கிறார். திரையில் அவரது நடிப்பு ரசிக்கும்படி இருக்கிறது. சரவணன் படம் முழுக்க வந்து செல்கிறார். அவரது கதாபாத்திரம் படத்திற்கே அச்சாணியாக விளங்குகிறது. சூதாட்டத்தில் ஆர்வத்துடன் ஈடுபடும் போதும், அதில் தனது சொத்துக்களை இழந்து பின்னர், அதனை மீட்கும் முயற்சியில் ஈடுபடும் சரவணின் நடிப்பு ரசிக்கும்படி இருக்கிறார். ஒரு சூதாட்டக்காரராகவே வாழ்ந்திருக்கிறார் என்று சொல்லும் அளவுக்கு அவரது கதாபாத்திரம் சிறப்பாக இருக்கிறது. வஞ்சகம், வேஷம் என சூதாட்டத் தளபதியாக மதுசூதனின் அட்டகாசப்படுத்தி இருக்கிறார். தான் நடிக்கும் ஒவ்வொரு படங்களிலும் தனது கதாபாத்திரம் குறித்து பேசவைக்கும் அருள்தாஸ், இந்த படத்திலும் அனைவரையும் கவரும்படி நடித்திருக்கிறார். காமெடியில் பிளாக் பாண்டி படம் முழுக்க வந்தாலும், அவரது காமெடி அவ்வளவாக எடுபடவில்லை. குறைவான காட்சியில் வந்தாலும், கருணாஸ் அனைவரையும் எதிர்பாராத சிரிப்புக்கு ஆளாக்குகிறார். நிதின் சத்யா, அர்ஜய், சண்முகராஜன் என அனைவரும் கதாபாத்திரத்திற்கு தேவையானதை சிறப்பாக கொடுத்திருக்கின்றனர்.
Pandigai is a 2017 Tamil Film stars R.H.Vikram , Feroz , Krishna Sekhar , Anandhi , Saravanan , , Karunas , Arjai , directed by Feroz & music by R.H.Vikram. Pandigai Release Date is 14-07-2017 and Pandigai running time is 135 Min