Original Music Composer : | Hiphop Tamizha Adhi |
Director : | Pradeep Ranganathan |
ஜெயம் ரவி தொடர்ந்து வித்தியாசமான ஜானர்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இதில் நினைவை இழந்தவனின் கதையை தொட்டுள்ளார். 1980 களின் உலகத்திற்கும் தற்போதைய காலத்தின் வித்தியாசத்தையும் மையமாக வைத்து தான் மொத்தக் கதையும். ஆனால் அதன் ஊடாக காமெடியாக தமிழ் சினிமா மசாலாவில் ஒரு கதையை சொல்லியிருக்கிறார்கள். மண்டையை பிய்த்துகொள்ளும் சிக்கலான திரைக்கதையாக இல்லாமல் தற்கால யூடியூப் வீடியோக்கள் போல திரைக்கதை எழுதப்பட்டிருப்பது நலம். ஒவ்வொரு காட்சியும் காமெடியாக ஆரம்பித்து சென்டிமெண்ட்டாக மாறிவிடுகிறது.
ஜெயம் ரவி 1980 களின் வாழ்க்கையில் இருந்து கொண்டு அவர் செய்யும் குறும்புகள் சிரிப்பு. 1980களின் மனநிலையில் ஒருவன் இருந்தால என்னாகும் என்பதை இன்னும் ஆழமாக சொல்லியிருக்கலாம். காஜலுடன் காதல், சிலைத்திருட்டு என்று படம் வேறு பாதைக்கு ஓடி விடுகிறது. ஜெயம் ரவி ஸ்கூல் பையனாக உடல் இளைத்து, 2016ஐ புரிந்து கொள்ளாமல் தவிப்பது, காதல் சொல்ல தடுமாறுவது, பிள்ளைகளுடன் விளையாடுவது என கலக்கியிருக்கிறார். காமெடி என முடிவெடுத்து செய்திருக்கிறார்கள். அதை ஒழுங்காகவும் செய்து முடித்துள்ளாரகள். ஆனால் படத்திற்குள்ளாக ஜானர் மாறிக்கொண்டிருப்பது ஏனோ!
காஜல் அழகாக இருக்கிறார். ஆனால் அவருக்கு நடிக்க பெரிய வாய்ப்பு இல்லை. படத்தில் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம், யோகி பாபு நண்பனாக சமீபத்தில் நிறைய வசீகரிக்கிறார். ஆனால் அவர் ஐடி வேலை என்பது உட்டாலக்கடி. கே. எஸ் ரவிக்குமார் ஆச்சரியமான வில்லனாக வருகிறார். வரும் சில இடங்களிலும் கவனம் ஈர்த்திருக்கிறார். மொத்தத்தில் 90கிட்ஸ் மூவி ஃபீலிங்கில் அருமையான படைப்பை தந்திருக்கலாம் ஆனால் தமிழ் சினிமா மசாலாவில் சிக்கி சராசரியான காமெடிப் படமாக ஆகிவிட்டது.
இயக்குநர் புதுமுகம் நல்ல நல்ல ஐடியாக்கள் பலவற்றை எழுதி ஒரே படத்தில் திணிக்க முயன்றிருக்கிறார். சராசரி ரசிகனின் ரசிப்பை நம்பி திரைக்கதை எழுதியுள்ளார். ஆனால் பாதி நிறைவேறியிருக்கிறது. பல இடங்களில் இரட்டை அர்த்த வசனம் தேவை தானா? 16 வருடங்கள் கழித்து ரவி இப்போதைய டிரெண்ட் வசனங்கள் பேசுவது எப்படி? ஆனால் எல்லாம் தாண்டி மேக்கிங்கில் கவனம் ஈர்த்துள்ளார்கள். எடிட்டிங் படத்தின் தரத்தை அழகாக்கியிருக்கிறது. இசை ஹிப்ஹாப் பல வருடங்களாக போட்டுக்கொண்டிருக்கும் அதே இசை. இன்னும் எத்தனை ஆண்டுகள் என்பது தெரியவில்லை. கிருஷ்ணராஜுக்கு கதைக்கு நன்றி சொல்லியிருக்கிறார்கள் நன்று. கோமாளி கவனம் ஈர்க்கும் நகைச்சுவை சினிமா.
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் ஜெயம் ரவி இரண்டு காலகட்டங்களுக்கு ஏற்றார் போல் திறமையாக நடித்திருக்கிறார். 90ஸ் கிட்ஸ்சாக சிறுவயதில் தொலைத்த பல்வேறு விஷயங்களை தற்போது தேடி அலையும் காட்சிகளில் ரசிக்க வைத்திருக்கிறார். சில குறும்பு காட்சிகள் சிரிக்க வைக்கிறது. அவருக்கு போட்டியாக யோகி பாபு வேற லெவலில் காமெடி செய்துள்ளார்.
நாயகிகளாக நடித்திருக்கும் காஜல் அகர்வால், மற்றும் சம்யுக்தா ஹெக்டே இருவரும் அழகு பதுமையாக வந்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்கள். தன்னுடைய அனுபவ நடிப்பால் கவர்ந்திருக்கிறார் கே.எஸ்.ரவிக்குமார்.
16 வருடமாக கோமாவில் இருந்த 90-ஸ் கிட் திடீரென்று தற்போது நவீன உலகத்தில் கண்முழித்து பார்க்கும்போது அவர் காணும் மாற்றங்களை எப்படி எதிர்கொள்கிறார். மேலும், 90ஸ் கால கட்டத்தில் அவர் வாழ்ந்த வாழ்க்கையை தற்போது 2கே வாழும் வாழ்க்கை முறையையும் எப்படி அவருக்கு மாற்றத்தையும் வலியை ஏற்படுத்துகிறது என்பதை சுவாரஸ்யமாகவும் கலகலப்பாகவும் இயக்கி இருக்கிறார் இயக்குனர் ப்ரதீப் ரங்கநாதன். நவீனம் என்ற பெயரில் நாம் எவற்றையெல்லாம் துளைத்துள்ளோம் என்பது நமக்கு உணரவைக்கிறது.
படத்தின் மிகப்பெரும் பலம் ஹிப்ஹாப் ஆதியின் பின்னணி இசை. ஆனால், பாடல்களில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம். ரிச்சர்ட் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறது.
சிறுவயதில் இருந்தே ஜெயம் ரவியும், யோகி பாபுவும் நெருங்கிய நண்பர்கள். இவர்கள் ஸ்கூலில் 12ம் வகுப்பு படித்து வருகிறார்கள். இதே ஸ்கூலில் சம்யுக்தா ஹெக்டே சேருகிறார். இவரை பார்த்தவுடன் ஜெயம் ரவிக்கு பிடித்து விடுகிறது. இவரிடம் தன்னுடைய காதலை 1999ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி சொல்ல செல்கிறார்.
அப்போது ரவுடியாக இருக்கும் கே.எஸ்.ரவிகுமாரால் ஜெயம் ரவிக்கு ஒரு விபத்து ஏற்படுகிறது. இதில் ஜெயம் ரவி கோமா நிலைக்கு செல்கிறார். 16 வருடங்களுக்கு கோமாவில் இருந்து விடுபடுகிறார்.
கோமாவில் இருந்து எழுந்த ஜெயம் ரவிக்கு எல்லாம் புதுசாக இருக்கிறது. இதிலிருந்து ஜெயம் ரவியின் வாழ்க்கை மாறுகிறது. இதன்பின் என்னென்ன கஷ்டங்கள் அனுபவித்தார். எப்படி வாழ்க்கை சென்றது? என்பதே படத்தின் மீதிக்கதை.
NULL
Comali is a 2019 Tamil Film stars Hiphop Tamizha Adhi , Pradeep Ranganathan , Jayam Ravi , Kajal Agarwal , Samyuktha Hegde , K.S.Ravikumar , Yogi Babu , Kavita Radheshyam , Naren , Varun Kamalakannan , Mannai Sathik , directed by Pradeep Ranganathan & music by Hiphop Tamizha Adhi. Comali Release Date is 15-08-2019 and Comali running time is 143 Min