Original Music Composer : | Vishal Chandrasekar |
Director : | Kalyan |
குலேபகாவலி என்று ஒரு படம் வந்தது. அதிரடி காமெடி ஹிட் படமெல்லாம் கிடையாது. ஓகே என ஒத்துக்கொள்ளும் வகையிலான ஒரு காமெடிப்படம். அந்த படத்தின் அதே தன்மையில் அதே இயக்குநர் ஹீரோவுக்கு பதில் ஜோதிகா, ரேவதியை வைத்து அதே கதையை கொஞ்சம் மாற்றி எடுத்திருக்கிறார். கதை, திரைக்கதை என ஏதாவது இருக்கிறதா என்று தேடினாலும் எங்கேயும் படத்தில் அது இல்லை. காட்சிகளை எந்த நோக்கில் எழுதினார்கள் என்பது சுத்தமாக புரியவில்லை. ஒரு காட்சியில் கூட லாஜிக் இல்லை. தொடர்ச்சி இல்லை. சுவாரஸ்யமும் இல்லை.
காமெடி என்பது சீரியஸ் பிஸினஸ் என்பார்கள். சிரிக்க வைப்பது என்பது அத்தனை கடினம் ஒரு காமெடிப்படத்தை அத்தனை எளிதில் எழுதிவிட முடியாது. நடிகர்களை வித்தியாசமாக காட்டுவது. தமிழ் சினிமாவில் வெற்றி பெற்ற காட்சிகளை மீண்டும் கலாய்ப்பது. அரசியல் பகடிகள், வெற்றி பெற்ற ஹீரோக்கள் டயலாக் இதெல்லாம் எப்படி காமெடி வகையறாவில் வரும் என்பது புரியவில்லை.
படத்தின் ஒரு காட்சி கூட நம்மை ஈர்க்கவில்லை. ஜோதிகாவை திருடியாக பார்ப்பது கொஞ்சம் புதிதாக இருக்கிறது. ஆனால் கதையிலோ, காட்சிகளிலோ ஏதாவது இருந்தால மட்டும் தானே ரசிக்க முடியும். ரேவதி , ஜோதிகா காம்பினேஷன் நன்றாக இருக்கிறது. ஆனால் காமெடி இல்லை. ஆனந்த் ராஜ், மன்சூர் அலிகான், யோகிபாபு ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே படத்தில் இருக்கிறது. ஆளாளுக்கு ஒரு காட்சி சிரிக்க வைத்திருக்கிறார்கள் அவ்வளவே! ஆனந்த்ராஜ் பல காட்சிகளில் கொஞ்சமாய் சிரிக்க வைக்கிறார். யோகிபாபு முகத்தை காமெடி என கேவலப்படுத்துவது தேவைதானா? படம் முழுதும் திருட்டை சொல்லிவிட்டு கடைசி காட்சியில் நியாயம் பேசுவது எப்போது தீரும்?
வசனங்கள் எனும் பெயரில் பழைய பட வசனங்களே மீண்டும் வருவது எரிச்சல். ஜோதிகா படங்களை நம்பிக்கையுடன் பார்க்கலாம் என்று சமீபத்திய தன் படங்களின் மூலம் ஏற்படுத்தி வைத்திருந்த ஜோதிகா இதில் அதை உடைத்திருக்கிறார். பெரிய ஏமாற்றம்.
கடி ஜோக் காமெடிகள் எல்லாம் குழந்தைகளே சிரிக்காத காலம் இது. படம் முழுதையும் அதை நிரப்பி வைத்திருக்கிறார்கள். இசை எனும் பெயரில் சத்தம் காதை அடைத்துக் கொண்டே இருக்கிறது. மூன்றே லோகெஷன்களில் மொத்த படத்தையும் முடித்துள்ளார்கள். படம் பார்க்கும் போது படம் எப்போது முடியும் எனும் அயர்ச்சி வந்து விடுகிறது. ஜாக்பாட் காலி டப்பா.
படம் முழுக்க வரும் ஜோதிகாவும், ரேவதியும் ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுக்காமல் போட்டி போட்டு நடித்துள்ளனர். நடிப்பு மற்றும் டான்சிற்கு பெயர்போன ஜோதிகா, இப்படத்தில் ஆக்ஷன் அவதாரம் எடுத்து, அதிலும் ஸ்கோர் செய்துள்ளார். ஒபனிங் சாங், சண்டை காட்சிகள், பஞ்ச் டயலாக் என ஆக்ஷன் ஹீரோயினாக மிளிர்கிறார் ஜோதிகா. ஒரு காலத்தில் ரஜினி, கமல் போன்ற டாப் ஹீரோக்கள் காதலித்த ரேவதியை, இந்த படத்தில் மொட்ட ராஜேந்திரன் காதலிக்கும் அளவுக்கு நிலைமை மாறிவிட்டது. ரேவதிக்கு முதுமை முகத்தில் தெரிந்தாலும், நடிப்பில் தெரியவில்லை.
செல்வந்தர், பெண் போலீஸ் என இரு வேடங்களில் நடித்துள்ள ஆனந்த்ராஜ், தனது நேர்த்தியான நடிப்பால் இரு கதாபாத்திரங்களுக்கும் உயிர் கொடுத்துள்ளார். அவர் நடித்துள்ள மானஸ்தன், மானஸ்தி என்ற இரு கதாபாத்திரங்களிலும் காமெடிக்கு பஞ்சம் வைக்கவில்லை. யோகிபாபு, மொட்ட ராஜேந்திரன், கோலமாவு கோகிலா பட புகழ் டோனி, மனோபாலா, தங்கதுரை என படத்தில் ஒரு காமெடி பட்டாளமே நடித்துள்ளது. குறிப்பாக தனது அழகை தொலைத்துவிட்டு தேடும் யோகிபாபு காமெடியில் முத்திரை பதித்துள்ளார்.
குலேபகாவலி படத்தை போன்று இப்படத்தையும் காமெடி படமாகவே எடுத்துள்ளார் கல்யாண். ஆக்ஷன் ஹீரோக்களுக்கு இணையான கதாபாத்திரத்தில் ஜோதிகாவை நடிக்க வைத்தது சிறப்பு. காமெடி படமாக இருந்தாலும் இதில் சமூகத்திற்கு தேவையான மெசேஜும் கொடுத்துள்ளார். திரைக்கதையில் சில இடங்களில் தொய்வு தெரிகிறது. விஷால் சந்திரசேகரின் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. ஆனந்தகுமாரின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்தாகவே அமைந்துள்ளது.
ஜோதிகாவும் ரேவதியும் சாதுரியமாக மற்றவர்களை ஏமாற்றி பணம் சம்பாதித்து வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் இருவரும் ஒரு ஆணுக்கு நிகரான அனைத்து வேலைகளையும் செய்யும் திறன் படைத்தவர்கள். போலீசிடம் சிக்காமல் சாதுரியமாக ஏமாற்றி வரும் இவர்கள், திரை அரங்கில் ஏற்பட்ட பிரச்சனையின் போது போலீஸ் ஒருவரை தாக்குகிறார்கள்.
இதனால் சிக்கலில் மாட்டி இருவரும் சிறைக்கு செல்கிறார்கள். அங்கு சச்சுவை சந்திக்கிறார்கள். சச்சு மூலம் இவர்களுக்கு ஒரு ஜாக்பாட் தொடர்பான துப்பு கிடைக்கிறது. அது செல்வந்தர் ஆனந்த்ராஜ் வீட்டில் இருப்பது இவர்களுக்கு தெரிய வருகிறது. அந்த ஜாக்பாட் என்ன? ஆனந்த்ராஜூக்கு தெரியாமல் ஜாக்பாட்டை எடுத்தார்களா? இல்லையா? என்பதே மீதிக்கதை.
NULL
Jackpot is a 2019 Tamil Film stars Vishal Chandrasekar , Kalyan , Jyothika , Revathi , Yogi Babu , Mansoor Ali Khan , directed by Kalyan & music by Vishal Chandrasekar. Jackpot Release Date is 02-08-2019 and Jackpot running time is 142 Min