House Owner (2019) Movie Details

House Owner
Tamil
Gibran
(India)
1 hr 49 mins

House Owner Crew List

Original Music Composer :
Director :

House Owner International Release Dates

Country
Release Date
India
28-06-2019

House Owner Film Songs

1
Duration: 04:44 Minutes
2
Singers: D.Sathya Prakash
Duration: 03:55 Minutes
3
Singers: Benny Dayal
Duration: 03:54 Minutes

House Owner Movie Critic Reviews

சிறந்த வீடு

3.0/5

பெரிய கதாநாயகனோ, கதாநாயகியோ தேவைப்படாத ஒரு அழகான எமோஷனல் கதையை விறுவிறுப்பான திரைக்கதை மூலம் சொல்லி ரசிகர்களை கட்டிப்போட்டதோடு கண்கலங்க வைத்து அனுப்புகிறார் லட்சுமி.

கிஷோர், ஸ்ரீ ரஞ்சனி இருவரும் தங்களது பக்குவமான நடிப்பால் படத்தை தாங்குகிறார். அல்சைமர் நோயாளியாக எல்லாவற்றையும் மறந்துவிடும் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார் கிஷோர். அவரை குழந்தை போல பார்த்துக்கொள்ளும் மனைவியாக ஸ்ரீ ரஞ்சனியின் நடிப்பும் அசத்தல். இருவரும் நமது அடுத்த வீட்டு பெரியவர்கள் போல இயல்பாக வாழ்ந்து இருக்கிறார்கள். இளம் ஜோடிகளாக வரும் பசங்க கிஷோர், லவ்லின் இருவரும் கதாபாத்திரங்களுக்கு ஏற்ற தேர்வுகள்.

ஜிப்ரானின் இசை படத்தின் கதையோடு ஒட்டி உறவாடுகிறது. பின்னணியில் நமக்குள் பதற்றத்தை கடத்தி இருக்கிறது. கிருஷ்ணசேகரின் ஒளிப்பதிவு பாலக்காட்டு பிராமண வீடுகளையும் சென்னையில் வெள்ளத்தால் சூழப்படும் வீடுகளையும் கண்முன்னே கொண்டு வருகிறது. தபஸ் நாயக்கின் ஒலிப்பதிவு படத்துக்கு பெரிய பலம். பிரேமின் படத்தொகுப்பும் கச்சிதம்.

லட்சுமி எளிய கதையை அருமையான படமாக்கி இருக்கிறார். கிளைமாக்ஸ் நெருங்க நெருங்க நம்மை பதற வைக்கிறார். படம் முழுக்க அன்பு தான். இந்த காரணங்களுக்காகவே சின்ன நெருடலாக இருக்கும் பாலக்காட்டு பிராமண மொழியை மன்னிக்கலாம்.

ஒரு உண்மைக்கதையை கையில் எடுத்து அதில் ஏராளமான அன்பையும் கணவன் மனைவி அன்யோன்யத்தையும் அழகாக சொல்லி இறுதிக்காட்சியில் கலங்க வைத்த விதத்தில் லட்சுமி ராமகிருஷ்ணன் தான் ஒரு கவனிக்கப்பட வேண்டிய இயக்குனர் என்பதை அழுத்தமாக பதித்து இருக்கிறார்.

2015-ம் ஆண்டு சென்னை வெள்ளத்தில் மூழ்கிய போது நடந்த ஒரு சம்பவத்தை திரைக்கதையாக மாற்றி இருக்கிறார் லட்சுமி. மழை பெய்யும்போது படம் தொடங்குகிறது. கிஷோரும் ஸ்ரீரஞ்சனியும் தனியாக வசிக்கும் வயதானவர்கள். கிஷோருக்கு அல்சைமர் என்னும் ஞாபக மறதி நோய். இந்நோய் தீவிரமாகி மனைவியையே யார் என்று கேட்கும் பரிதாப நிலையில் இருக்கிறார். ஸ்ரீ ரஞ்சனி தான் அவரை பார்த்துக்கொள்கிறார்.

கிஷோர் சிறுவயதாக இருக்கும்போது லவ்லினை திருமணம் செய்துகொண்டது நினைவுகளாக வந்து போகிறது. பாலக்காட்டு பிராமண வீடுகளில் நடப்பது போல திருமணம் நடக்கிறது. திருமணத்தின்போது இளவயதுக்கே உரிய குறுகுறுப்பு, காதல் என படம் விரிகிறது. இன்னொரு பக்கம் கிஷோர், ஸ்ரீரஞ்சனி வீட்டை வெள்ளம் சூழ்கிறது. வீடு முழுக்க வெள்ளம் வர இருவரும் சிக்கி தவிக்கிறார்கள். முடிவு என்ன ஆகிறது என்பதே படம்.

Published by Others on: 28-06-2019. Originally published here

காதலும் அதை காட்டிய விதமும்

3.0/5

வாழ்வில் எது முக்கியம் சந்தோஷம். அது எப்படி கிடைக்கும் அன்பின் மூலம். அன்பே உலகின் அடிப்படை. ஆனால் அன்பை கொடுப்பதில் நமக்கு ஏன் இத்தனை கஞ்சத்தனம். அதை அளவெடுத்து தான் அனைவரிடமும் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். யார் மீது நாம் அன்பை அளவில்லாமல் எதிர்பார்ப்பில்லாமல் தருகிறோம் யோசித்துப் பாருங்கள் காதலிடம். குடும்பத்திடம். ஆனால் இன்றைய உலகில் கணவன் மனைவியிடம் கூட அந்த எதிர்ப்பார்ப்பில்லாத அன்பு இல்லை.

சென்னை பெரு வெள்ளத்தின் போது நம் அத்தனை மனங்களிலும் பொங்கி வழிந்தது ஒரு அன்பு. பெயர் தெரியாத முகமே அறியாத நபர்களுக்காக எந்த உதவியும் செய்ய நாம் தயாராக இருந்தோம். ஆனால மழை வடிந்த பின் அன்பும் நம்மிலிருந்து வடிந்து விட்டது.

சென்னை மழை வெள்ளத்தின் மழை நாட்களில் ஒரு வயாதான தம்பதியினிடையே நாம் தற்போது தொலைத்திருக்கும் எதிர்பார்ப்பில்லா அளவில்லா அன்பு தான் இந்த மொத்த படமும். அதை அன்பு பொங்க அவர்களின் பிரச்சனையை, அவர்களின் காதலை, சென்னையின் மழை நாட்களை நம் கண் முன் கொண்டு வந்தததில் ஜெயித்திருக்கிறார்கள்.

ஒரு வீட்டுக்குள் தான் மொத்தப்படமும் இருவர் மட்டும் தான் ஆனாலும் நம்மை நகர விடாமல் அவரக்ளிம் காதல் இழுத்துக்கொள்கிறது. அலசைமர் நோயாளியாக நொடியில் மறந்து பேசியதையே திரும்ப திரும்ப பேசும் பாத்திரம். கொஞ்சம் பிசகினாலும் ஓவர் ஆக்டிங் ஆகிவிடக்கூடியதை அழகாய் கச்சிதமாய் நம் முன் கொண்டு வந்துள்ளார் கிஷோர். ஶ்ரீரன்சனியை டான்ஸ் ஆட அழைத்து பின் தள்ளி விடுவதும், பெட்டில் திடீரென முழித்து ஶ்ரீரன்சனியை உதைத்து தள்ளும் இடங்களில் மனிதர் பாத்திரத்தை உண்மையாக்கிவிடுகிறார். தன் இளமை காதல் நினைவுகளை நினைத்து ஏங்கும் இடங்கள் அழகு. தன் மனைவியிடமே மனைவியை பற்றி சொல்வது என மனிதர் பின்னுகிறார்.

ஶ்ரீரஞ்சனி இதி லைஃப் டைம் கேரகடர். இப்படியான பாத்திரம் அவர் வாழ்வில் திரும்ப கிடைக்காது. அத்தனை அன்பையும் கொட்டித் தீர்க்கிறார். நமக்கே எரிச்சல் வரும் இடங்களிலும் கணவனை ஒரு நொடியில் மன்னித்து அன்பை பொழிவது அத்தனை அழகு. இப்படியும் அன்பு இருக்க முடியுமா என ஆச்சரியபட வைக்கிறது ஶ்ரீரஞ்சனியின் அன்பு.

இருவருக்குள்ளும் நிகழும் சண்டைகளும் காதலும் தான் படம் அதை இருவரும் அழகாய் கொண்டு வந்துள்ளார்கள். ப்ளாஷ்பேக்கில் இளம் ஜோடிகளாய் வரும் கிஷோர் லவ்லின் அத்தனை அழகு. அந்தக் காதல் காட்சிகள் காட்சிபடுத்தப்பட்டிருக்கும் விதமும் அத்தனை அழகு. அந்த்கதைதாம் முதிர் தம்பதியின் காய்ந்த போகாத அன்பின் காரணம். அதனால் அவை வெகு முக்கியமாய் மாறிவிடுகிறது. இளம் ஜோடிகள் இருவரும் பாந்தமாய் அந்த காதலை கொண்டுவந்துள்ளார்கள்.

Published by Others on: 27-06-2019. Originally published here

House Owner story & synopsis

NULL

Other Popular Sri Ranjani Movies

Recently Popular Movies

House Owner

House Owner is a 2019 Tamil Film stars Gibran , Lakshmy Ramakrishnan , Sri Ranjani , Kishore Kumar , Lovelyn Chandrasekhar , directed by Lakshmy Ramakrishnan & music by Gibran. House Owner Release Date is 28-06-2019 and House Owner running time is 109 Min