Director : | Hemambar Jasti |
Original Music Composer : | Sweekar Agasthi |
Singer : | Anthony Dasan , Gana Mani , Anurag Kulkarni |
Lyricist : | Karthik Netha |
நான்கு காதல் கதைகளை சுற்றி வரும் படம் தான் C/O காதல். பள்ளி, கல்லூரி, 30களில் இருக்கும் ஜோடி, 40களில் இருக்கும் ஜோடிகளின் காதல் கதையை படத்தில் காட்டியிருக்கிறார்கள். அரசு அலுவலகத்தில் பியூனாக வேலை செய்யும் 49 வயது பழனியின்(தீபன்) அன்றைய நாள் பற்றி காட்டி கதை துவங்குகிறது. மலையாளியான 42 வயது விதவை ராதா(சோனியா கிரி) அந்த அலுவலகத்திற்கு புது அதிகாரியாக வருகிறார். அவருக்கும், பழனிக்கும் இடையே காதல் உருவாகிறது
பள்ளியில் படிக்கும் வேலுவுக்கு(நிஷேஷ்) தன்னுடன் படிக்கும் சுனிதா(ஸ்வேதா) மீது ஈர்ப்பு ஏற்பட்டுகிறது. தனக்கு தெரிந்த குழந்தைத்தனமான விதங்களில் சுனிதாவை கவர முயற்சிக்கிறார் வேலு. 20களில் இருக்கும் கல்லூரி மாணவியான பார்கவி(அய்ரா) உள்ளூர் பெரியாளின் அடியாளான ஜோசப்(கார்த்திக் ரத்னம்) மீது காதல் கொள்கிறார்.
மதுக் கடையில் வேலை செய்யும் தாடிக்கு(வெற்றி) சலீமாவின்(மும்தாஜ் சர்கார்) முகத்தை கூட பார்க்காமல் அவர் மீது காதல் ஏற்படுகிறது. அந்த நான்கு காதல் கதைகளும் ஒரு புள்ளியில் இணைகிறது.
2018ம் ஆண்டில் வெளியான C/O காஞ்சரபலம் தெலுங்கு படத்தின் ரீமேக் தான் C/O காதல். ஒரிஜினல் படத்தில் இருந்து விலகிச் செல்லாமல் அழகாக இயக்கியிருக்கிறார் ஹேமம்பார் ஜஸ்டி. நீலன் ஷேகரின் வசனங்கள் ஒரிஜினிலில் இருந்து மொழி பெயர்க்கப்பட்டதாக உள்ளது.
ஒரிஜினலில் நடிகர் அல்லாதவர்களை நடிக்க வைத்தது பெரும் பலமாக இருந்தது. ஆனால் தமிழில் ஏற்கனவே நடித்த அனுபவம் உள்ளவர்கள், ஒரிஜினலில் நடித்தவர்களை நடிக்க வைத்தது மைனஸாகிவிட்டது. அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். அதை குறை சொல்ல முடியாது. ஆனால் பார்த்த முகங்கள் என்பது தான் ஒரிஜினலில் கிடைத்த அனுபவம் இல்லாமல் போய்விடுகிறது.
நடிகர்கள் தேர்வு இப்படி இருந்தாலும் படம் பார்க்க வருபவர்களை ஹேமம்பார் ஜஸ்டி ஏமாற்றவில்லை. C/O காதல் அனைவரும் பார்க்க வேண்டிய படம்.
Care of Kaadhal is a 2021 Tamil Film stars Hemambar Jasti , Sweekar Agasthi , Arya , Deepann , Mumtaz Sorcar , Vetri , Karthik Rathnam , Sonia Giri , Anthony Dasan , Gana Mani , Anurag Kulkarni , Karthik Netha , directed by Hemambar Jasti & music by Sweekar Agasthi. Care of Kaadhal Release Date is 12-02-2021 and Care of Kaadhal running time is 134 Min